டெல்லி மற்றும் அதன் எல்லைப் பகுதியை முற்றுகையிட்டு விவசாயிகள் கடந்த 15 மாதமாக நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று மாலையுடன் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்கள் தங்களுக்கு விரோதமானது என்று கூறி விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டிராக்டர்கள், உணவுப் பொருட்களுடன் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு, அங்கேயே தங்கி அவர்கள் நடத்திய போராட்டம், நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த சில தசாப்தங்களில் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டமாக விவசாயிகளின் முற்றுகை கருதப்படுகிறது. இதற்கு சற்றும் பிடி கொடுக்காத மத்திய அரசு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
தொடர்ச்சியாக, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளன்று, வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் தங்களது மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தார்கள்.
Also Read : ஓடும் அரசுப் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகள்... வாழ்நாள் முழுவதும் பயணம் இலவசம் என அரசு அறிவிப்பு
அவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையான, பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார தொகை வழங்குவது ஏற்கபட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கோரிக்கை தொடர்பாகவும் விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று மாலையுடன் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
Also Read : ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய குரூப் கேப்டன்... வீர தீரத்திற்கான பதக்கத்தை பெற்றவர்
இன்று மாலை 5.30 மணியளவில், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்கின்றனர். இதன்பின்னர் டெல்லியின் எல்லைப் பகுதியான சிங்கு மற்றும் திக்ரியில் நாளை மறுதினம் காலை 9 மணியளவில் விவசாயிகள் வெற்றிப் பேரணி நடத்தவுள்ளனர். தொடர்ச்சியாக 13-ம்தேதி பஞ்சாப் பொற்கோவிலில் பிரார்த்தனை, 15 ம் தேதி டெல்லியில் மீண்டும் ஆலோசனை கூட்டம் என புதிய அறிவிப்புகள் விவசாய சங்கத்தினரிடம் இருந்து வெளிவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farmers Protest