தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 15 பேர் பலி

விபத்துக்குள்ளான பேருந்து - வேன்

பைக் மீது மோதாமல் இருக்க பேருந்து டிரைவர் பேருந்தை திருப்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்து கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஹைதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே ஹைதராபாத் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையின் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க பேருந்து டிரைவர் பேருந்தை திருப்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்து கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்தவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை கர்னூல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Watch

Published by:Vijay R
First published: