கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால், கேரளாவில் கடலோர மாவட்டங்கள் உட்பட மலை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது.
தொடர்ந்து, வருகின்ற 19-ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோட்டயம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் உட்பட 7 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் மற்றும் மலைப்பகுதி மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
Also Read:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் – எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்
இதனிடையே கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் சிலரை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாக மாநில அரசு தகவல்கள் கூறுகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்காக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் மீட்பு நடவடிக்கைகளுக்காக முப்படைகளும் களமிறங்கியுள்ளன.
மேலும் மழை காரணமாக பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக 4 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என மாநில வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் அறிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 105 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.