Home /News /national /

நொய்டா ஆறு வழி விரைவு சாலையில் 15 அடிக்கு திடீர் பள்ளம்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

நொய்டா ஆறு வழி விரைவு சாலையில் 15 அடிக்கு திடீர் பள்ளம்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

நொய்டா விரைவுச்சாலையில் பெரும் பள்ளம்

நொய்டா விரைவுச்சாலையில் பெரும் பள்ளம்

பிரதமர் மோடி திறந்து வைத்த புந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே சாலை, கனமழை காரணமாக சேதமடைந்து ஒரே வாரத்தில் குண்டும் குழியுமாக மாறி கடும் விமர்சனத்தை சந்தித்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Noida, India
    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் 15 அடி நீளம், 2 அடி அகலத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வாகன போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது.

    உத்தரப் பிரதேச மாநிலத்தையும் நொய்டாவைவும் இனைக்கும் ஆறு வழி நெடுஞ்சாலையான கிரெட்டர் நொய்டா விரைவுச் சாலை ரூ.400 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. சுமார் 25 கிமீ நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலை பரிதாபாத், பல்லாப்கர் மற்றும் பல்வால் ஆகிய நகர்களை இணைத்து செல்கிறது. அதிக போக்குவரத்து நெரிசல் கொண்டு பகுதிகள் என்பதால், நெரிசலை கட்டுப்படுத்தி பயண நேரத்தை குறைக்கும் பொருட்டே இந்த விரைவுச்சாலை கட்டப்பட்டது.

    இதையும் படிங்க: கர்நாடக கல்வித்துறையில் பெரும் ஊழல் - 13,000 பள்ளிகளின் கூட்டமைப்பு பிரதமருக்கு புகார் கடிதம்

    அன்றாடம் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வரும் இந்த விரைவு சாலையில் நேற்று திடீரென்று பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து தடைப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். செக்டார் 96 என்ற பகுதியில் உள்ள சூப்பர்டெக் கட்டத்திற்கு எதிரே உள்ள விரைவு சாலையில் 15 அடி நீளம், 2 அடி அகலத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்ட நிலையில், டிராபிக் போலீசார் இதை உடனடியாக கவனித்து அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர்.


    நேற்று மாலை முழுவதும் துரிதமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று போக்குவரத்து இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டது.

    கடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த புந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே சாலை, ஒரே வாரத்தில் கனமழை காரணமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டத்தில் ஊழல் செய்து தரமற்ற சாலைகளை அமைத்துள்ளனர் என குற்றஞ்சாட்டி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தினர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Expressway, Noida, Uttar pradesh

    அடுத்த செய்தி