Home /News /national /

PMModiBirthday: பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு நாடு தழுவிய 15 நாள் இரத்த தான இயக்கம் இன்று தொடங்குகிறது

PMModiBirthday: பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு நாடு தழுவிய 15 நாள் இரத்த தான இயக்கம் இன்று தொடங்குகிறது

ரக்தன் அம்ரித் மஹோத்சவ்

ரக்தன் அம்ரித் மஹோத்சவ்

PMModiBirthday: 3,600 இரத்த வங்கிகள் இ-ரக்ட்கோஷ் போர்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளன, மீதமுள்ளவற்றை அதே போர்ட்டலுடன் இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு 15 நாள் இரத்த தான இயக்கம் இன்று தொடங்குகிறது. இரத்த தானம் செய்ய குடிமக்கள் ஆரோக்யா சேது செயலி அல்லது இ-ரக்ட்கோஷ் போர்ட்டலில் பதிவு செய்யுமாறு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.

தலைவர்கள் பிறந்தநாள் அன்று அவரது பெயரால் சமூக பணி செய்வது காலம் காலமாக இருக்கும் வழக்கம்.  இன்று இந்திய நாட்டின் பிரதமர் தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆண்டுதோறும் அக்டோபர் 1 அன்று தேசிய தன்னார்வ இரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த இரண்டு நாட்களையும் இணைத்து 15 நாட்கள் ரத்த தான இயக்கமாக அரசு கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, இந்த ரத்த தான இயக்கமானது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் யூனிட் இரத்தத்தை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதோடு, ஊதியம் பெறாத தன்னார்வ இரத்த தானத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரத்த தானம் செய்பவர்களின் பட்டியலை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனால் தேவைப்படும் எவருக்கும் சரியான நேரத்தில் உதவி கிடைக்கும். ஒரு யூனிட் என்பது 350 மில்லி இரத்தம்.

PMModiBirthday : பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன தெரியுமா?

ரத்த தானம்:

ஒரு சாதாரண ஆரோக்கியமான நபரின் உடலில் 5-6 லிட்டர் இரத்தம் உள்ளது. ஒவ்வொரு 3 மாதங்களுக்குப் பிறகு ஒருவர் இரத்த தானம் செய்யலாம். தானம் செய்த பிறகு, 35 முதல் 42 நாட்கள் வரை அந்த ரத்தத்தைப் பயன்படுத்த முடியும். இரத்தம் பிளாஸ்மா, சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் போன்ற கூறுகளால் ஆனது. உறைந்த பிளாஸ்மாவை ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம், சிவப்பு இரத்த அணுக்கள் 35-42 நாட்கள் வரை பயன்படுத்தப்படலாம். ஐந்து நாட்களுக்குள் பிளேட்லெட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.

ரக்தன் அம்ரித் மஹோத்சவ்:

இந்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பல்வேறு அரசு சாரா மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் இந்த நிகழ்வில் ஈடுபடுவார்கள்.

நாட்டில் 3,900க்கும் மேற்பட்ட இரத்த வங்கிகள் இயங்கி வருகின்றன. அதில் இதுவரை, 3,600 இரத்த வங்கிகள் இ-ரக்ட்கோஷ் போர்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளன, மீதமுள்ளவற்றை அதே போர்ட்டலுடன் இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

டோல்கேட் இனி இருக்காது, ஆனால் புது ட்விஸ்ட் - மத்திய அமைச்சர் அறிவிப்பு

செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 1 வரை ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட இரத்த அலகுகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்க e-RaktKosh இணைய போர்ட்டலில் நேரடி டாஷ்போர்டு செயல்படும். மக்கள் தங்கள் பங்களிப்பால் எண்ணற்ற விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று கூறி, இரத்த தானம் செய்வதாக உறுதிமொழி எடுக்குமாறு மக்களை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்
Published by:Ilakkiya GP
First published:

Tags: Blood Donation, Modi Birthday, PM Narendra Modi

அடுத்த செய்தி