தீவிரவாதத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது: பிரதமர் மோடி பேச்சு!

தீவிரவாதத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

news18
Updated: June 15, 2019, 9:38 AM IST
தீவிரவாதத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது: பிரதமர் மோடி பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடி
news18
Updated: June 15, 2019, 9:38 AM IST
பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின்போது, இந்தியா-கிர்கிஸ்தான் இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக கிர்கிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்றார்.

தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இதேபோல, பெலாரஸ் அதிபரை நேற்று சந்தித்தார். ஆனால், நேரமின்மை காரணமாக ஈரான் அதிபர் ஹாசன் ரவ்ஹானியுடனான சந்தித்து ரத்துசெய்யப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே தீவிரவாத செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாநாட்டின் முதல் நாளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திப்பதை தவிர்த்த பிரதமர் மோடி, இரண்டாவது நாளான நேற்று, தலைவர்கள் சந்திப்பின்போது, வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, கிர்கிஷ்தானில் அரசு முறை பயணத்தை நரேந்திர மோடி தொடங்கினார்.

அப்போது, பிரதமருக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, கிர்கிஸ்தான் அதிபர் சூரன்பே ஜீன்பெக்கோ தலைமையிலான குழுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், நரேந்திர மோடி மற்றும் சூரன்பே முன்னிலையில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனைத் தொடர்ந்து, கிர்கிஸ்தான் அதிபருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதத்தை ஒழிப்பதில் இருவரும் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

தீவிரவாதத்தை எந்த சூழலிலும் ஏற்க முடியாது என்பதை உலகத்துக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். 2021-ம் ஆண்டை இந்தியாவுக்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையே கலாச்சார மற்றும் நட்புறவு ஆண்டாக கொண்டாட உள்ளதாக மோடி அறிவித்தார்.

கிர்கிஸ்தானில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்திய-கிர்கிஸ்தான் வர்த்தக அமைப்பை இரு தலைவர்களும் கூட்டாக திறந்துவைத்தனர். இந்தியாவில் அதிக வர்த்தக வாய்ப்புகள் இருப்பதால், முதலீடு செய்ய வருமாறு கிர்கிஸ்தான் தொழிலதிபர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு நாள் பயணத்தை முடித்துவிட்டு கிர்கிஸ்தானிலிருந்து டெல்லிக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்.

Also see...

First published: June 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...