முகப்பு /செய்தி /இந்தியா / தெலுங்கானாவில் ஆளும்கட்சி நிர்வாகி படுகொலை.. 144 தடை உத்தரவு அமல்

தெலுங்கானாவில் ஆளும்கட்சி நிர்வாகி படுகொலை.. 144 தடை உத்தரவு அமல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தெலுங்கானாவில் ஆளும் கட்சியின் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவதிற்கு பிறகு அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கானாவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பம் மாவட்டம் தெலடாரூபள்ளி பகுதியில் உள்ள ஊரக மண்டல அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை ஆளும் தெலுங்கானா கட்சியை சேர்ந்த கிருஷ்ணைய்யா என்பவர் ஏற்றினார்.

அவர் தேசிய கொடியை ஏற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து கிருஷ்ணய்யாவை கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்தனர். சம்பவத்தின் போது அவருடைய கை மணிக்கட்டு துண்டானது.

Also Read : எங்கள் சட்டப்படி கடவுளுக்கு மட்டும் தான் வணக்கம்.. தேசியக் கொடி ஏற்ற மறுத்த ஆசிரியை கூறிய பகீர் விளக்கம்

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த பிரமுகர் கொல்லப்பட்டதால் அவருடைய ஆதரவாளர்கள் சிபிஎம் கட்சி தலைவரின் வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்தி அவருடை வீட்டின் மீது கற்களை வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

First published:

Tags: Murder, Telangana, TRS