காஷ்மீரில் 144 சிறார்கள் கைது! உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
காஷ்மீரில் 144 சிறார்கள் கைது! உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
மாதிரிப் படம்
கல்லெறிந்ததற்காகவும், கலவரத்தை ஏற்படுத்தி பொதுச் சொத்துகள் மற்றும் தனியார் சொத்துகளைச் சேதப்படுத்தியதற்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் 144 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அம்மாநில காவல்துறை உச்ச நீதிமன்ற விசாரணை அமர்வில் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் சிறுவர்கள் சட்டவிரோதமாக பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குழந்தைகள் நல ஆர்வலர் எனாக்ஷி கங்குலி மற்றும் சாந்தா சின்ஹா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக, காஷ்மீரில் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவது குறித்து வரும் வழக்குகளை விசாரணை செய்வதற்கு நான்கு பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தது.
நீதிபதி அலி முகமது மேக்ரே தலைமையிலான அந்தக் குழு, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் அளித்த அறிக்கையை சமர்பித்தனர். அந்த அறிக்கையில், ‘எந்த குழந்தைகளும் சட்டவிரோதமாக கைது செய்யப்படவில்லை. கல்லெறிந்ததற்காகவும், கலவரத்தை ஏற்படுத்தி பொதுச் சொத்துகள் மற்றும் தனியார் சொத்துகளைச் சேதப்படுத்தியதற்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் 144 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 9, 11 வயது சிறார்களும் அடக்கம். சிறார்கள், அவர்களுக்கென உருவாக்கப்பட்ட சட்டத்தின்படியே கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.