Home /News /national /

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,431 ஆக உயர்வு!

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,431 ஆக உயர்வு!

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது.

    ஒமைக்ரான் பாதிப்பை பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 454 பேருக்கும், அடுத்தபடியாக டெல்லியில் 320 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 118 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

    உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் குறுகிய நாட்களில் பல்வேறு நாடுகளுக்கும் பரவி விட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாகி கொண்டே வருகிறது.

    இதையும் படிங்க : டெல்லியில் ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் - வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு

    இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று வேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1431 ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் 23 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

    இதனிடையே, கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு, கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் 3,48,61,579 பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் 8,949 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து மொத்தமாக 3,42,75,312 குணமடைந்துள்ளனர். நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.32% என்றளவில் உள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 406 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,81,486 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, 1,04,781 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    இதுவரை 1,45,16,24,150 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Also read: இந்தியாவில் 15-18 வயது சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்!

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Omicron

    அடுத்த செய்தி