ஹோம் /நியூஸ் /இந்தியா /

143 வருட பழமையான பாலம்... சரிசெய்த 5 நாளில் கோர விபத்து - நடந்தது என்ன?

143 வருட பழமையான பாலம்... சரிசெய்த 5 நாளில் கோர விபத்து - நடந்தது என்ன?

குஜராத் பாலம் விபத்து

குஜராத் பாலம் விபத்து

குஜராத்தில் 140 ஆண்டு பழமையான ஆற்று பாலம் அறுந்து விழுந்து கோர விபத்துக்குள்ளான நிலையில், இந்த பாலத்தை நிர்வகிக்கும் குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gujarat, India

    குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 68 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோர்பி நகரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மச்சு நதியின் குறுக்கே 1879ம் ஆண்டு 230 மீட்டர் நீளத்தில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுலாத்தலமாக கருதப்படும் இந்த பாலம் புனரமைப்பு பணிக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் மூடப்பட்ட நிலையில், பணிகள் முடிந்து கடந்த 26ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மோர்பி நகருக்கு வந்தனர். பாலத்தில் ஒரே நேரத்தில் 150 பேர் மட்டுமே நிற்க முடியும் என கூறப்படும் நிலையில், 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் பாரம் தாங்க முடியாமல் கேபிள் அறுந்து விழுந்தது. இதனால் ஏராளமானோர் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர். நீச்சல் தெரிந்த சிலர், தண்ணீரில் நீந்தியபடி கரை சேர்ந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் என பலர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த நிலையில், மீட்பு படை வீரர்கள் படகுகளில் சென்று மீட்டனர். எனினும் தற்போது வரை 68 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த முதலமைச்சர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சாங்வி ஆகியோர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஆற்றுக்குள் இன்னும் பலர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணியில் கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: சாலை பள்ளத்தால் பறிபோன 22 வயது இளைஞரின் உயிர்: தொடரும் சோகம்

    பாலத்தை புனரமைக்கும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம், அதை திறக்கும் முன் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலத்தை நிர்வகிக்கும் குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Published by:Kannan V
    First published:

    Tags: Accident, Disasters, Gujarat, PM Modi, River bridge construction