140 வழக்குகள்... திணறும் கெஜ்ரிவாலின் ‘ஆம் ஆத்மி’!

Illustration by Mir Suhail/News18.com

முதல்வர் கெஜ்ரிவால் மீது மட்டும் சிவில்- கிரிமினல் என மொத்தம் 30 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
டெல்லி முதல்வராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் மீது 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், உறுப்பினர்கள் என பலரது மேல் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 140. இதில் 72 வழக்குகள் தள்ளுபடி, செட்டில்மெண்ட் என அடங்கிவிட்டன.

மீதம் இருப்பதில் 39 வழக்குகள் நிலவையிலும் சில வழக்குகளில் இன்னும் சார்ஜ் ஷீட் கூட பதியப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

140-ல் ஒரே ஒரு வழக்கில் மட்டும் விசாரணை முடிந்து தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பிரகாஷ் ஜர்வால் பாட்டியாலா நீதிமன்றத்தால் காவல்துறையினரைத் தாக்கியதற்காகவும் பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்காகவும் தண்டனை பெற்றார்.

குறிப்பாக, முதல்வர் கெஜ்ரிவால் மீது மட்டும் சிவில்- கிரிமினல் என மொத்தம் 30 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 12 கிரிமினல் வழக்குகளில் 4 வழக்குகல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மீது 12 வழக்குகள் உள்ளன. டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: சீக்கிரமாக CM ஆகுங்க என்று டிடிவி தினகரனிடம் பேசிய சிறுமி!
Published by:Rahini M
First published: