• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 14 வயது சிறுமியை கடத்திச் சென்று 22 நாட்களாக சிறை வைத்து பாலியல் வன்புணர்வு செய்த சிறுமியின் உறவினர்!

14 வயது சிறுமியை கடத்திச் சென்று 22 நாட்களாக சிறை வைத்து பாலியல் வன்புணர்வு செய்த சிறுமியின் உறவினர்!

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி!

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி!

தொடர்ந்து சிறுமியை பல முறை அந்த நபர் பாலியல் வன்புணர்வு செய்ததும், அங்குள்ள கட்டுமான தளத்தில் அவரை கட்டிட கூலி வேலையை பார்க்க வைத்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

  • Share this:
14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று 22 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்த நபரை போஸ்கோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமி ஒருவர் அவரின் உறவினர் ஒருவரால் கடத்தில் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்ததுடன் கட்டுமான வேலைகளை பார்க்க வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் இடாவா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த பிப்ரவரி மாத முதல் வாரத்தில் 45 வயது மதிக்கத்தக்க அவருடைய தூரத்து உறவினரான ஒருவரால் கடத்தப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கடந்த பிப்ரவரி 10ம் தேதி அன்று இடாவா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

கடத்தப்பட்ட அச்சிறுமியை 22 நாட்களுக்கு பின்னர் நேற்று ஜெய்சால்மர் மாவட்டம் பொக்ரான் பகுதியில் உள்ள கட்டுமான தளம் ஒன்றில் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். சிறுமியை கடத்திச் சென்ற அவருடைய தூரத்து உறவினர் அவரை அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிறுமியை பல முறை அந்த நபர் பாலியல் வன்புணர்வு செய்ததும், அங்குள்ள கட்டுமான தளத்தில் அவரை கட்டிட கூலி வேலையை பார்க்க வைத்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அந்த 45 வயது நபர் மீது POCSO உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை கோட்டாவில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.

குழந்தைகள் நல கமிட்டியினர் சிறுமியிடம் விசாரித்த போது, அந்த நபர் தனக்கு போதைப் பொருளை கொடுத்து மோட்டார் சைக்கிளில் வைத்து சவாய் மாதோபூருக்கும் பின்னர் பொக்ரானுக்கும் கூட்டிச் செறதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: