முகப்பு /செய்தி /இந்தியா / தினமும் 10-15 ஆண்களால் பாலியல் பலாத்காரம்.. ஸ்பாவில் வேலை பார்க்கும் இளம்பெண் பகீர் புகார்

தினமும் 10-15 ஆண்களால் பாலியல் பலாத்காரம்.. ஸ்பாவில் வேலை பார்க்கும் இளம்பெண் பகீர் புகார்

மாதிரி படம்

மாதிரி படம்

பூஜா என்ற பெண் ஒருவர் இளம்பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறி மோசடி நாடகமாடி இந்த சிக்கலில் தள்ளியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ஸ்பாவில் வேலை செய்யும் 14 வயது பெண் ஒருவர் தன்னை நாள்தோறும் 10-15 ஆண்களால் கட்டாய பாலியல் உறவுக்கு ஆளாகிறேன் என்ற அதிர்ச்சிக்குரிய புகார் தெரிவித்துள்ளார். டெல்லி குருகிராமில் வசித்து வரும் 14 வயது பெண் வேலை தேடி வந்துள்ளார். கடந்த மாதம் 14 வயது இளம் பெண்ணுக்கு பூஜா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். தனக்கு வேலை ஒன்று வேண்டும், நான் வேலைத் தேடி வருகிறேன் என பூஜாவிடம் அந்த பெண் கூறிய நிலையில், தனக்கு தெரிந்த மருத்துவரின் கிளினிக்கில் உதவியாளராக பணிபுரியுங்கள் என்று சேர்த்துவிட்டுள்ளார்.

பூஜாவின் பேச்சை கேட்டு பணிக்கு சேர்ந்த கிளினிக்கில் வேலைக்கு சேர்ந்த நிலையில், அந்த இளம்பெண்ணை இரு நாள்களிலேயே வேலையில் இருந்து மருத்துவர் வெளியேற்றியுள்ளார். மீண்டும் வேலை தேடிவந்த நிலையில், அந்த பெண்ணை பூஜா மீண்டும் சந்தித்துள்ளார். வேலை பறிபோனதை இளம்பெண் கூறிய நிலையில், குருகிராமில் உள்ள ஓமக்சே என்ற மாலில் இயங்கும் ஒரு ஸ்பா ஒன்றில் வரவேற்பாளர் வேலை உள்ளது எனக் கூறி அங்கு சேர்த்துவிட்டுள்ளார்.

ஸ்பாவை நடத்தும் நபரும் பூஜாவின் உறவினராவார். பூஜாவின் பேச்சைக் கேட்டு இளம் பெண் வேலைக்கு சேர்ந்த நிலையில், வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே இளம்பெண்ணை ஸ்பா உரிமையாளர்கள் ஸ்பாவுக்கு வந்த நபர் ஒருவரிடம் கட்டாய பாலியல் உறவில் ஈடுபட வைத்துள்ளனர். பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், வேலைக்கு வரமாட்டேன் எனக் கூறிய நிலையில், பாலியல் உறவை அவர்கள் வீடியோ எடுத்து வைத்து பிளாக் மெயில் செய்துள்ளனர்.

பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அடுத்த ஐந்து நாள்கள் பணிக்கு சென்ற நிலையில், நாள்தோறும் அந்த பெண்ணை 10 முதல் 15 ஆண்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாத பெண் தனது தாயிடம் பிரச்சனையை கூறியுள்ளார். தாயின் நம்பிக்கையுடன் வேலையை விட்டு நிற்க முடிவெடுத்த நிலையில், பூஜாவும் அந்த ஸ்பாவின் உரிமையாளர்களும் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தொந்தரவு தந்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க: பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபர்..8 வருடம் கழித்துக் கண்டுபிடித்த மனைவி - உண்மை வெளிவந்தது எப்படி?

இறுதியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தனது தாயுடன் காவல்நிலையம் சென்று தனக்கு நேர்ந்த அவலத்தை கூறி புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கும் தனது பெற்றோரின் உயிருக்கும் அபாயம் என புகார் தெரிவித்த பெண், அப்பாவி பெண்களை குறிவைத்து இந்த கும்பல் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். பெண் அளித்த புகாரின் பேரில் மோசடி பெண் பூஜா, ஸ்பாவை நடத்தும் ஜூமா, ரூபேல், சதாம் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

First published:

Tags: Crime News, Gurugram, Minor girl, Rape