ஆந்திராவில் செம்மரக்கட்டைகளை கடத்தி சென்ற 13 தமிழர்களை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
கடப்பா மாவட்டம், லங்கமலை வனப்பகுதியில் இருந்து செம்மரம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் அந்த வழியாக வந்த லாரியை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றதால், சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்றனர்.
போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக வேகமாக சென்ற லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
உடனடியாக லாரியில் இருந்த இரண்டு பேர் மற்றும் அதன் பின்னால் இரண்டு கார்களில் சென்ற 14 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். லாரியை சோதனை செய்த போது அதில் சுமார் ஒரு டன் எடையுள்ள 49 செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ALSO READ | கேரள அதானி துறைமுகம்: காவல்நிலையத்தை சூறையாடிய உள்ளூர் மக்கள்! போலீசார் தடியடி
செம்மரக்கட்டைகள், லாரி, இரண்டு கார்கள், ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களில் 13 பேர் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, வேலூர், சேலம்,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும், மூன்று பேர் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Kadapa S01p21