இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: 14 மாதக் குழந்தை உயிரிழந்த சோகம்..!

குஜராத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 175 பாதிக்கப்பட்டும் 16 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: 14  மாதக் குழந்தை உயிரிழந்த சோகம்..!
மாதிரி படம்
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பால் குஜராத்தில் 14 மாத குழந்தை உயிரிழந்த சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் ராம்நகரில் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி 14 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வெளிமாநில தொழிலாளியின் மகனான இந்த குழந்தைக்கு கொரோனா தொற்று எந்த பயண விவரமும் இல்லாமல் ஏற்பட்டது.

ராம்நகர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனில்லாமல் குழந்தை உயிரிழந்ததாக கூறப்பபடுகிறது. குழந்தை 2 நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் உடலில் பல உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இவரது பெற்றோர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், ராம்நகரில் உள்ள துறைமுக  தொழிற்சாலைகளில் சாதாரண தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள்.  குஜராத்தில் இளம்வயதில் கொரோனா தொற்று ஏற்பட்டு குழந்தை உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 175 பாதிக்கப்பட்டும் 16 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

கொரோனா வைரஸால் இந்தியாவில் 5351 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading