முகப்பு /செய்தி /இந்தியா / வயலுக்குச் சென்ற தாய்.. 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை!

வயலுக்குச் சென்ற தாய்.. 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

13 வயது சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து கர்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தின் ஜீவர்கி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாந்தி எடுத்தும் மயக்கமடைந்து சிறுமி தவித்து வந்துள்ளார். முதலில் இதை சாதாரன  பாதிப்பு என நினைத்த சிறுமியின் தாயார், பிரச்சனை சீராகாத நிலையில் ஜனவரி 31ஆம் தேதி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுமியிடம் உண்மையை விசாரித்தனர்.

அப்போது தான் இந்த கர்ப்பத்திற்கு காரணம் சிறுமியின் தந்தையே என்பது அம்பலமானது. சிறுமியின் தாயார் வயல் வேலைக்கு சென்றபோது, தந்தை தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார்.இதைத் தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், விவரமறிந்த சிறுமியின் தந்தை அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். அவரை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது. தந்தை தனது மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Karnataka, Rape