முகப்பு /செய்தி /இந்தியா / குளிர்பானத்தில் மயக்க மருந்து... இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

குளிர்பானத்தில் மயக்க மருந்து... இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

8 வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞர்களை மத்தியப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கமலாநகர் பகுதியில் 13 வயது சிறுமி 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த புதன் கிழமை இரவு 8 மணி அளவில் வீட்டின் வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்த போது, பக்கத்து வீடுகளை சேர்ந்த இரு இளைஞர்கள் அவரிடம் வந்து பேசியுள்ளனர். அப்பகுதியில் பார்ட்டி நடைபெறுகிறது, அங்கே செல்லலாம் வா என்று அந்த சிறுமையை பார்ட்டிக்கு அழைத்துள்ளனர்.

இளைஞர்களின் பேச்சைக் கேட்டு சிறுமியும் பார்ட்டிக்கு சென்றுள்ளார். பார்ட்டி நடந்து முடிந்து அனைவரும் கிளம்பி சென்ற நிலையில், இரு இளைஞர்களும் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து சிறுமியிடம் கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். பின்னர் மயக்கத்தில் இருந்த சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதற்கு மற்றொரு இளைஞர் உறுதுணையாக இருந்துள்ளார். இரவு முழுவதும் சிறுமியை இருவரும் சிறைபிடித்து வைத்துள்ளனர்.

இதற்கிடையில் வீட்டில் சிறுமி காணவில்லை என்பதால் பதறிப்போன பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். காலையில் சிறுமி அவர்களிடம் இருந்து தப்பி வந்து வீட்டாரிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார். தொடர்ந்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் இருவரையும் கைது செய்த காவல்துறை அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் விபா பாடேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் பாஜக அரசின் ஆட்சியில் மத்தியப் பிரதேசம் குற்றங்களின் தீவாக விளங்குவதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதில் முதல் மாநிலமாக விளங்குகிறது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு உரிய பாதுகாப்பை இனியும் அரசு தரவில்லை என்றால் அரசுக்கு எதிராக மகளிர் காங்கிரஸ் அமைப்பு பெரும் போராட்டம் நடத்தும் என எச்சரித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளர் நேஹா பக்கா, "மாநில அரசு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சிறையில் அடைத்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு மரண தண்டனை என்ற பிரிவை உருவாக்கிய நாட்டின் முதல் மாநிலம் மத்தியப் பிரதேசம் தான்" எனக் கூறியுள்ளார்.

First published:

Tags: Madhya pradesh, Minor girl, Rape