கட்டாயப்படுத்தி பாலின மாற்று சிகிச்சை: பெண்ணாக மாற்றப்பட்ட 13 வயது சிறுவனை மாதக்கணக்கில் பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்!

தங்களுக்கு எதிராக ஏதாவது செய்ய நேர்ந்தால் சிறுவனையும், அவனின் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

தங்களுக்கு எதிராக ஏதாவது செய்ய நேர்ந்தால் சிறுவனையும், அவனின் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

  • Share this:
13 வயது சிறுவனை, பாலின மாற்று சிகிச்சைக்கு கட்டாயப்படுத்தி பெண்ணாக மாற்றி, 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத்திற்கு வந்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது போஸ்கொ பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

டெல்லி லக்‌ஷ்மி நகர் பகுதியில் நடைபெற்ற மேடை நடன நிகழ்ச்சி ஒன்றில் தான் அந்த நபரை சந்தித்தான் 13 வயது சிறுவன் சுபம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிறுவனை நட்புறவாக்கிய அந்த நபர் அவனுக்கு நடன நிகழ்ச்சிகளின் மூலம் வருமானம் ஈட்ட வழிவகை செய்வதாக உறுதியளித்து மந்தவள்ளி பகுதிக்கு அச்சிறுவனை அந்த நபர் அழைத்துச் சென்றான். கூறியது போலவே சில நாட்களுக்கு அச்சிறுவனுக்கு நடன வாய்ப்புகளை வழங்கிய அந்த நபர் பின்னொரு நாள் அவனுக்கு போதை வரவழைக்கும் பொருட்களை கட்டாயப்படுத்தி கொடுத்து அவன் மயக்கமாக இருந்த போது பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து சிறுவனை பெண்ணாக மாற்றியிருக்கிறான்.

சிறுவனை பெண் போல காட்டுவதற்காக ஹார்மோன் மருந்துகளையும் அளித்துள்ளனர். இதன் பின்னர் மேற்கண்ட நபரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து சிறுவனை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் பிறரையும் கூட்டி வந்து சிறுவனை விபச்சாரத்திலும் ஈடுபடுத்தியுள்ளனர். சில நேரங்களில் அச்சிறுவனை போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுக்கவும் வைத்திருக்கின்றனர்.தங்களுக்கு எதிராக ஏதாவது செய்ய நேர்ந்தால் சிறுவனையும், அவனின் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதன் பின்னர் சிறுவனின் நண்பனான மற்றொரு சிறுவனையும் இவர்களின் இருப்பிடத்திற்கு கடத்தி வந்துள்ளனர். இதனிடையே கொரோனா பொதுமுடக்கத்தை பயன்படுத்தி சிறுவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சுபத்தின் தாயிடம் வந்துள்ளனர். அவர் இருவரையும் வாடகை வீடு ஒன்றில் தங்க வைத்துள்ளார். இருப்பினும் அந்த கும்பல் இவர்களின் இருப்பிடத்தை அறிந்து அங்கு வந்து அந்த இடத்தையே சூறையாடி இரண்டு சிறுவர்களையும், சிறுவன் சுபமின் குடும்பத்தினரையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் சுபமின் நண்பனான மற்றொரு சிறுவனையும் அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். சிறிது நாட்களில் இருவரும் அங்கிருந்து தப்பி டெல்லி ரயில் நிலையத்தில் ஒரு நாள் முழுவதும் மறைந்திருந்த நேரத்தில் இவர்களை கண்ட வழக்கறிஞர் ஒருவர் டெல்லி மகளிர் ஆணையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தற்போது சிறுவர்களை பாலியல் வன்புணர்வு செய்த 6 பேர் மீதும் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Published by:Arun
First published: