டெல்லி ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா

டெல்லி ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா
(கோப்புப் படம்)
  • Share this:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. டெல்லியில் இதுவரையில் 22,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில், பொதுமக்களைக் கடந்து மருத்துவர்கள், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவில், ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், டிரைவர்கள், அலுவலக உதவியாளர்கள் என 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் டெல்லி மாநில அரசு அதிகாரிகள் 6 பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.









Also see:
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading