தூத்துக்குடியில் காற்றில் அதிக நச்சு மாசுபாடு

news18
Updated: March 7, 2018, 11:20 PM IST
தூத்துக்குடியில் காற்றில் அதிக நச்சு மாசுபாடு
அதிகரிக்கும் காற்று மாசுபாடு
news18
Updated: March 7, 2018, 11:20 PM IST
தமிழகத்தின் தூத்துக்குடி உள்ளிட்ட 13 தென்னிந்திய நகரங்களில் காற்று மாசுபாடு அதிக அளவில் உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

‘கிரீன்பீஸ் இந்தியா’ என்னும் அமைப்பு மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் நாட்டில் காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலை தயாரித்தது.

இந்தப் பட்டியலில், தமிழகத்திலுள்ள  தூத்துக்குடி,  தெலங்கானாவிலுள்ள 3 நகரங்கள், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள 5 நகரங்கள், கர்நாடகத்திலுள்ள 4 நகரங்கள்  ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த நகரங்கள் மட்டுமல்லாது, தென்னிந்தியாவிலுள்ள 26 நகரங்களில் காற்றில் கலந்துள்ள துகள் மாசுபாட்டின் அளவு தேசிய அளவிலான சராசரியை விட அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2015, 2016 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி,  இந்தப் பட்டியலில் தெலங்கானாவிலுள்ள 10 நகரங்கள், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள 15 நகரங்கள், கர்நாடகத்திலுள்ள 10 நகரங்கள், தமிழகத்தின் 4 நகரங்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின்  தூத்துக்குடியில் துகள்  மாசுபாட்டின் அளவு தேசிய அளவிலான சராசரியை விட 200%  அதிகமாக உள்ளது.

மேலும் கர்நாடகத்திலுள்ள தும்கூரில் துகள்  மாசுபாட்டின் அளவு 144% அதிகமாகவும்,  அதே மாநிலத்திலுள்ள பிதாரில் 88% அதிகமாகவும்,  தெலங்கானாவிலுள்ள கோத்தூரில்   78% அதிகமாகவும், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் 68 % அதிகமாகவும்  உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
Loading...
தேசிய சுத்திகரிக்கப்பட்ட  காற்று திட்டத்தின்படி அடுத்த 5 ஆண்டுகளில்  காற்று மாசுபாடு அதிகமுள்ள 100 நகரங்களில் மாசுபாட்டின் அளவை 50 % அளவுக்கு குறைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில்,  தூத்துக்குடி உள்ளிட்ட 13 தென்னிந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளது.
First published: March 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்