மகாராஷ்டிரா கோவிட் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து - 13 பேர் உயிரிழப்பு

கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 • Share this:
  மகாராஷ்டிராவில் உள்ள வசாய் கோவிட் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்தில் சிக்கி 13 உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

  மகாராஷ்டிராவில் மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டத்தின் வசாயில் உள்ள கோவிட் மையத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சிக்கி 13 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளதாக வசாய் மாநகராட்சியல் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் சிக்கிய மேலும் பலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மகாராஷ்டிராவில் ஒரிரு நாட்களுக்கு முன்னர் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்த சம்பவத்தில் 24 பேர் உயரிழந்தனர். இந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் தற்போது தீவிபத்தில் சி்க்கி 13 பேர் பலியாகி உள்ளனர்.
  Published by:Vijay R
  First published: