இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உலகின் அதிக வயதுடைய சிவானந்தா வாழ்ந்து வருகிறார். 126 வயதாகும் இவர் ஆகஸ்ட் 8, 1897 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரது பிறந்த தேதி பாஸ்போர்ட்டின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜப்பானை சேர்ந்த ஜிரோமோன் கிமுரா தான் உலகிலேயே அதிக வயதான நபர் கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு படைத்திருந்தார். அவரது சாதனையை சிவானந்தா முறியடித்துள்ளார்.
5.2 அடி உயரம் கொண்ட இவர் தரையில்தான் உறங்குகிறார். யோகா ஆசிரியரான இவர் தலையணையாக மரப்பலகையை உபயோகப்படுத்துவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இன்றளவும் எந்த மருத்துவ குறைபாடுகளும் இன்றி இவர் வாழ்ந்துவருகிறார். ரயில் பயணங்களும் இவர் மேற்கொண்டுவருகிறார்.
தற்பொழுது கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறார். தனது ஆரோக்கியம் குறித்து பேசிய இவர், சாதாரண உணவு தான் உட்கொள்வதாகவும், பால், பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் செக்ஸ் வைத்துக்கொள்ளாததும் எண்ணெய் பொருட்களை தவிர்த்து ஆவியில் வேக வைத்த உணவுகளை உண்பதும்தான் நீண்ட ஆயுளுக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Uttar pradesh, Varanasi