Home /News /national /

இத்தாலியில் இருந்து வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா உறுதி!

இத்தாலியில் இருந்து வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா உறுதி!

Flight

Flight

சமூக பரவலாகவும் ஓமைக்ரான் உருவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இத்தாலியில் இருந்து அமிர்தசரஸ் வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் 58,000 ஆக இருந்த தினசரி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று அதிரடியாக 90 ஆயிரத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழகம், கேரளா, குஜராத் என பல மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரேயடியாக அதிகரித்துள்ளது.

    ஓமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,630 ஆக உயர்ந்துள்ளது.

    Also read:  இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு புதிய உச்சம் - மாநில வாரியாக பாதிப்பு எவ்வளவு?

    வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்களுக்கே பெரும்பாலும் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சமூக பரவலாகவும் ஓமைக்ரான் உருவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில், இத்தாலியில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு வந்த விமானத்தில் பயணிகள் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமிர்தசரஸ் விமான நிலைய இயக்குனர் வி.கே.சேத் தெரிவித்துள்ளார். இந்த விமானத்தில் மொத்தம் 179 பயணிகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இது சார்ட்டர் ரக விமானம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Also read:  இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது; ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...

    இந்த பயணிகள் அனைவருக்கும் ஓமைக்ரான் உள்ளதா என்பது விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது.



    முன்னதாக இத்தாலியில் இருந்து வந்த விமானம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானது என தகவல்கள் வெளிவந்தன. ஆனால், இதற்கு ஏர் இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனம் ரோம் நகரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு விமான சேவை அளிக்கவில்லை என விளக்கம் தெரிவித்துள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Corona, Omicron

    அடுத்த செய்தி