இந்தியாவிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 1,200 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை.! இத்தாலியில் மீட்பு..
இந்தியாவிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 1,200 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை.! இத்தாலியில் மீட்பு..
புத்தர் சிலை
Padamapani Idol : இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டு சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த அழகான வடிவமைப்புடன் காணப்படும் இந்த புத்தர் சிலை 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இத்தாலி நாட்டின் வட பகுதியில் உள்ள ஒரு முக்கிய நகரம் மிலன் (Milan). மிலனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஒன்றில், கிட்டத்தட்ட இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டு சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு "மிக சிறப்பு வாய்ந்த அவலோகிதேஷ்வரா பதமாபாணி (Avalokiteshwara Padamapani) சிலை ஒன்று மிலன் நகரில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இத்தாலியின் மிலன் நகரில் மீட்கப்பட்டு உள்ள குறிப்பிட்ட இந்த சிலை பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் அமைந்திருக்கும் குர்கிஹாரில் உள்ள தேவிஸ்தான் குண்டல்பூர் கோயிலில் (Devisthan Kundalpur Temple) இருந்து கடந்த 2002-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சட்டவிரோதமாக திருடப்பட்டது ஆகும்.
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டு சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த அழகான வடிவமைப்புடன் காணப்படும் இந்த புத்தர் சிலை 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதாவது கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால சிலை என்றும் இந்திய தூதரகம் கூறி இருக்கிறது. இந்த 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த போதிசத்வா சிற்ப கலையை உள்ளடக்கிய கற்சிலையானது இத்தாலியின் மிலன் நகரில் உள்ள தனியார் சிலை சேகரிப்பாளரிடம் (private idol collector) இருந்து மீட்கப்பட்டது. மேலும் இந்த சிலையானது கடந்த வியாழக்கிழமை மாலை மிலனில் உள்ள இந்திய தூதரகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
Avalokiteshwara Padamapani-யின் இந்த விலைமதிப்பற்ற கல் சிலையை மீட்டு மீட்டெடுப்பதில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக இந்தியா - மிலன் தூதரகத்தின் மூத்த துணைத் தூதரக அதிகாரி ஒருவர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். மேலும் 22 ஆண்டுகளுக்கு இத்தாலியில் இருந்து மீட்கப்பட்டிருக்கும் இந்த சிலை புதுடெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறைக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.
8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையில் அவலோகிதேஷ்வரா தனது இடது கையில் மலர்ந்த தாமரையின் தண்டுகளை பிடித்தபடி நிற்கிறார். பௌத்தத்தில் அவலோகிதேஸ்வரா என்பது கருணையை உள்ளடக்கிய போதிசத்வர் என்பதாகும். கௌதம புத்தர் போதிநிலையை அடைவதற்கு முற்பட்ட காலத்தில் தன்னை போதுசத்வர் என்றே அழைத்துக்கொண்டார். இதற்கு போதிநிலையில் வாழ்பவர் என்பது பொருள்.
இந்த சிற்பம் இத்தாலியின் மிலனுக்கு வருவதற்கு முன் பிரான்சில் உள்ள ஆர்ட் மார்க்கெட் ஒன்றில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தியா பிரைட் ப்ராஜெக்ட், சிங்கப்பூர் அண்ட் ஆர்ட் ரெக்கவரி இன்டர்நேஷனல், லண்டன் ஸ்விஃப்ட்லி ஆகியவை திருடப்பட்ட சிலையை அடையாளம் கண்டு திரும்ப பெறுவதில் உதவியதாக இந்திய தூதரகம் கூறி இருக்கிறது.
இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இந்த கல் புத்தர் சிலையை போலவே புனித நகரமான கயாவிற்கு அருகிலுள்ள குர்கிஹாரிலிருந்து மேலும் பல கல் மற்றும் வெண்கல சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக India Pride Project-ன் இணை நிறுவனர் கே. விஜய்குமார் கூறி இருக்கிறார். அவற்றையும் தேடி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.