ரோமானியா நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ரோமானியா நாட்டுக்கு 120 இந்தியர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். 2 லட்சம் ரூபாய் பணம் கட்டிவிட்டு வெஸ்ட் மவுண்ட் என்ற நிறுவனத்துக்கு வேலைக்கு சென்ற இந்தியர்கள், 3 மாதங்களுக்கு பிறகு வேலையில்லாமல் உணவின்றி தவிக்கின்றனர். தங்களை மீட்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.