ஹோம் /நியூஸ் /இந்தியா /

பகத் சிங் வேடம்.. தூக்கில் தொங்குவது போல் ஒத்திகை..12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

பகத் சிங் வேடம்.. தூக்கில் தொங்குவது போல் ஒத்திகை..12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

பகத் வேட ஒத்திகையில் மாணவன் பலியான சோகம்

பகத் வேட ஒத்திகையில் மாணவன் பலியான சோகம்

பெற்றோர் வீட்டில் இல்லாத போது மாணவர் நாடகத்திற்காக ஒத்திகை செய்த போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  பகத் சிங் வேடத்திற்காக ஒத்திகை பார்த்த போது பள்ளி மாணவன் எதிர்பாராத விதமாக தூக்கில் தொங்கி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

  கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சஞ்சய் கௌடா. இந்த சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தார். இவர் தனது பள்ளியில் கலை நிகழ்ச்சி விழாவில் பங்கேற்க பெயர் கொடுத்துள்ளார். இவர் விழாவில் பகத் சிங் வேடமணிய முடிவெடுத்து, அதற்காக ஒத்திகைகள் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் இருந்த சிறுவன் பகத் சிங் நாடகத்தை வீட்டில் ஒத்திகை செய்து பார்த்துள்ளார்.

  அவரது பெற்றோர் இருவரும் வேலை காரணமாக வீட்டில் இல்லை. சிறுவன் தனியாக இருந்த நிலையில், பகத் சிங் தூக்கு மேடை நிகழ்வை ஒத்திகை செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தூக்குக் கயிறு மாட்டி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு வந்த பெற்றோர் இதை பார்த்தும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிறுவனின் உடலை கைப்பற்றிய காவல்துறை அதை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்துள்ளது.

  இதையும் படிங்க: சொத்து பிரித்ததில் அதிருப்தி... பெற்றோரை கொல்ல கூலிப்படையை ஏவிய மகன் கைது!

  இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பள்ளி தரப்பில் மாணவனிடம் பகத் சிங் வேடம் அணியும் படி கூறிவில்லை. சிறுவனே ஆர்வமாக பகத் சிங் வேடத்தை தேர்வு செய்தார். இந்த சம்பவம் பெரும் வேதனையை தருகிறது" என்றுள்ளார். 7ஆம் வகுப்பு மாணவனின் இந்த எதிர்பாராத மரணம் பெற்றோர், உறவினர், பள்ளியைச் சார்ந்தவர்கள், அப்பகுதியினர் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Bhagat Singh, Karnataka, School boy, Student