12 வயது சிறுமி ஒருவர் பொது கழிப்பறையில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் புனே மாவட்ட ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 2 மணியளவில் சிறுமி ஒருவர் அங்குள்ள பொது கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமியை பின்தொடர்ந்து சென்ற நபர் ஒருவர் கழிவறை கதவை பூட்டிவிட்டு, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே, கழிவறை சென்ற சிறுமி நீண்ட நேரமாக வராததால், அவரது மாமா கழிவறைக்குள் சென்று கதவை தட்டி பார்த்துள்ளார். அப்போது, உள்ளே இருந்த அந்த நபர் கதவை திறுந்த சிறுமியின் மாமாவை கீழே தள்ளவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதையும் படிங்க - அதிகாலையில் வெடித்த ஏசி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்
இதைத்தொடர்ந்து, நடந்த சம்பவத்தை சிறுமி குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் 35 வயதுடையவர் என்பதும், அதேபகுதியில் வசித்து வருபவர் என்பதும் தெரியவந்துள்ளது. பரபரப்பாக இயங்கும் ரயில் நிலையத்தில் உள்ள பொது கழிப்பறையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.