மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிந்த் என்ற மாவட்டத்தில் 4 வகுப்பு படிக்கும் 12 வயது மனிஷ் ஜாதவ் என்ற சிறுவன் பள்ளி முடித்து பள்ளி வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பும் வழியில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 15 ஆம் நாள் சிறுவன் மனிஷ் ஜாதவ் பள்ளியில் அண்ணனுடன் இணைந்து மதிய உணவு உண்டுள்ளான். அதன் பின்னர், வீட்டிற்குத் திருப்பப் பள்ளி வாகனத்தில் சென்றபோது திடீரென சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட வாகன ஓட்டுநர் பள்ளி அதிகாரிகளிடம் தெரிவித்து மாணவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சையாக சிபிஆர் அளித்துள்ளனர். ஆனால் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவர்கள் சிறுவனுக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தைப் பற்றித் தெரிவிக்கையில், இது திடீரென ஏற்படும் மாரடைப்பு என்று தெரிவித்துள்ளனர் (Cardiac arrest). இதயத்தில் திடீரென electrical malfunction என்பது ஏற்பட்டு உடலுக்குச் செல்லும் ரத்தத்தை நிறுத்துவதால் ஏற்படுகிறது. இது மாரியான எஸ்.சி.ஏ (sudden cardiac arrest)சில காலங்களாகச் சிறுவர்கள் இடையே அதிகரித்து வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வாழ்க்கை முறை மாற்றம், சக்கரை நோய், மது அருந்துவது, புகைப்பிடித்தல் மற்றும் அதிகரிக்கும் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே எஸ்.சி.ஏ ஏற்படுகிறது. எஸ்.சி.ஏ என்பது மிகவும் ஆபத்தானது என்றும் அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் 6 நிமிடத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மரபு வழியில் இதயம் தொடர்பான நோய் இருப்பவர்களுக்கு இது போன்று திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cardiac Arrest, School boy