முகப்பு /செய்தி /இந்தியா / லஞ்சம் கேட்டதாக தமிழ்நாடு போலீசாரை விசாரித்த ராஜஸ்தான் போலீஸ்... நடந்தது என்ன?

லஞ்சம் கேட்டதாக தமிழ்நாடு போலீசாரை விசாரித்த ராஜஸ்தான் போலீஸ்... நடந்தது என்ன?

கோப்பு படம்

கோப்பு படம்

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, ராஜஸ்தான் மாநில டிஜிபியை தொடர்பு கொண்டு, விளக்கம் அளித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rajasthan, India

திருச்சி கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ராஜஸ்தானில் விசாரணை நடத்தச் சென்ற தனிப்படை போலீசாரிடம், அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி கண்டோன்மென்ட், உறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை மற்றும் தொடர் வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ராஜஸ்தானைச் சேர்ந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் அளித்த தகவலின்படி, 300 சவரன் நகைகளை மீட்பதற்காக, 12 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு விரைந்தனர். அங்கு சோனியா என்ற பெண்ணிடம் இருந்து நகைகளை மீட்க முயன்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறையை தொடர்பு கொண்ட அவர், தன்னை தமிழ்நாடு போலீசார் மிரட்டுவதாக நாடகமாடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், தமிழ்நாட்டில் இருந்து சென்ற தனிப்படை போலீசாரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, ராஜஸ்தான் மாநில டிஜிபியை தொடர்பு கொண்டு, பல்வேறு இடங்களில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவங்கள் குறித்த விவரங்களை அளித்தார். இதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகர தனிப்படை போலீசாரை, ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடுவித்தனர்.

First published:

Tags: Bribe, Police arrested, Rajasthan