உத்தரகாண்ட் : சுரங்கப்பாதையில் சிக்கிய 12 தொழிலாளிகள் மொபைல் சிக்னல் மூலம் காப்பற்றப்பட்ட சம்பவம்

உத்தரகண்ட் துயரம்.

வெள்ளப்பெருக்கின்போது சுரங்கப்பாதைகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பலர் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், சுரங்கப்பாதையில் பணியாற்றிக் கொண்டிருந்த 12 பேர் மொபைல் சிக்னல் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

 • Share this:
  உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடுமையாக மழை பெய்து வந்தன. இதனையடுத்து, அம்மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பனிப்பாறைகள் உடைந்து மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால், Alaknanda மற்றும் Dhauliganga ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. வெள்லப்பெருக்கில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  வெள்ளப்பெருக்கின்போது சுரங்கப்பாதைகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பலர் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், சுரங்கப்பாதையில் பணியாற்றிக் கொண்டிருந்த 12 பேர் மொபைல் சிக்னல் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பாதிப்பில் சிக்கிக்கொண்ட மின் ஊழியர் லால் பகதூர் பேசும்போது, ’சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வருமாறு மக்கள் எங்களை நோக்கி கத்தும் சப்தங்கள் கேட்டது. ஆனால், நாங்கள் வெளியே வருவதற்குள் திடீரென தண்னீரும் மண்ணும் எங்கள் மீது விழ தொடங்கியது” என்று கூறியுள்ளார்.

  அதிகாரிகள் தெரிவித்ததன்படி, லால் பகதூர் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 7 மணி நேரம் சுரங்கப் பாதையில் சிக்கிக்கொண்டு இருந்துள்ளனர். தண்ணீர் சுரங்கத்தின் உள்ளே நுழைந்தபோது சுமார் 300 மீட்டர் ஆழத்தில் நாங்கள் இருந்தோம்” என்கிறார் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர். சமோலியில் உள்ள தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பேசும்போது, ’நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம். ஆனால், சிறிது நேரத்துக்குப் பிறகு நாங்கள் வெளிச்சத்தை பார்த்தோம். சுவாசிக்க சிறிதளவு காற்றும் கிடைத்தது. திடீரென எங்களில் ஒருவரது மொபைலில் நெட்வொர்க்கும் இருப்பதை கவனித்தோம். இதன்பிறகு எங்களது மேலாளரை அழைத்து எங்களது நிலைமையை தெரிவித்தோம்” என்று கூறினார்.

  இதனையடுத்து மேலாளர் அதிகாரிகளுக்கு தகவல்கள் கொடுத்துள்ளார். பின்னர், அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று கயிறு உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தி அவர்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ரு வருகின்றனர். தங்களை மீட்டதற்கு அதிகாரிகளுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ram Sankar
  First published: