எழும்பூர்-நாகர்கோவில் இடையே 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கம்!

எழும்பூர்-நாகர்கோவில் இடையே 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கம்!
கோப்புப்படம்
  • Share this:
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே நாளை முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழும்பூரில் இருந்து நாளை அதிகாலை 5 மணிக்கு புறப்படும் சரக்கு விரைவு ரயில் இரவு 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நாகர்கோவிலில் இருந்து நாளை காலை 8 மணிக்கு புறப்படும் சரக்கு விரைவு ரயில் இரவு 10 மணிக்கு எழும்பூரை சென்றடையும் என்றும் இந்த ரயில்கள் விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்காக சரக்கு விரைவு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...










சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading