Home /News /national /

ராஜஸ்தான் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் வீட்டில் சிக்கிய ரூ.12 கோடி பறிமுதல்..

ராஜஸ்தான் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் வீட்டில் சிக்கிய ரூ.12 கோடி பறிமுதல்..

முதலமைச்சர் அசோக் கெலாட்

முதலமைச்சர் அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.12 கோடி சிக்கியது.

    ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 13-ஆம் தேதி ரத்தன் காந்த் சர்மா உட்பட மூன்று நபர்களுக்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில், ரத்தன் காந்த் சர்மா வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத 5 கோடி ரூபாய் சிக்கியது. முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகனுடன் இணைந்து அவர் நிறுவனம் நடத்தி வருவதும், மற்ற இருவர் முதலமைச்சருக்கு நெருங்கிய ஆதரவாளர்களாகச் செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

    Also read: அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை: கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க அலைமோதிய மக்கள்..

    இதற்கிடையே, ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவினருடன் பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ சஞ்சய் ஜெயினை போலீசார் கைது செய்தனர்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Rajastan

    அடுத்த செய்தி