ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராஜஸ்தானில் 118 டிகிரி செல்சியஸில் வாட்டி வதைக்கும் வெயில்... குடிநீர் தட்டுபாட்டால் தவிக்கும் பொதுமக்கள்

ராஜஸ்தானில் 118 டிகிரி செல்சியஸில் வாட்டி வதைக்கும் வெயில்... குடிநீர் தட்டுபாட்டால் தவிக்கும் பொதுமக்கள்

வெயில்

வெயில்

ராஜஸ்தானில் 118 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் கொளுத்திய நிலையில் குடிநீர் தட்டுப்பாடும் சேர்ந்து கொண்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் 118 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்றும், வட இந்தியாவில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பாலைவன நிலப்பரப்பை பெருவாரியாக கொண்டுள்ள ராஜஸ்தானில் சாதாரண நாட்களிலேயே தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் உக்ரம் அடைந்துள்ள நிலையில் பார்மர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 118 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் தகித்து வருகிறது.

அனல் காற்று வீசுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறைந்தபட்ச தாகத்தை தீர்ப்பதற்கு கூட தண்ணீரின்றி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  நிலத்தடி நீரும் வற்றியதால் ஒரு குடம் தண்ணீருக்கு பல மைல் தூரம் மக்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Also see... நீங்கள் வெயில் காலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாத குளிர்கால உணவுகள் என்ன.? தெரிந்து கொள்ளுங்கள்

இதனிடையே தமிழகத்தில் சென்னையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வேலூரில் 39.2 டிகிரி செல்சியசும், கடலூரில் 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது

First published:

Tags: Drinking water, Heat Wave, Rajasthan, Summer