Home /News /national /

2021ல் நொடிக்கு 2 பிரியாணி ஆர்டர் செய்துள்ள இந்தியர்கள் - ஸ்விக்கி ரிப்போர்ட்!

2021ல் நொடிக்கு 2 பிரியாணி ஆர்டர் செய்துள்ள இந்தியர்கள் - ஸ்விக்கி ரிப்போர்ட்!

பிரியாணி

பிரியாணி

இந்தியர்களின் தேசிய உணவு போன்று கருதப்படும் பிரியாணி தான் இந்த 2021 ஆம் ஆண்டில் பலர் விரும்பி ஆர்டர் செய்துள்ளனர்.

உணவு பிரியர்களுக்கு எந்த வகை உணவாக இருந்தாலும் அதில் சிறந்த ருசி மற்றும் மணம் இருந்தால் அவசியம் விரும்பி சாப்பிடுவார்கள். உலகில் பல்வேறு வகையான உணவுகள் உள்ளன. ஒவ்வொரு உணவுகளுக்கும் தனி சிறப்புகள் உண்டு. அந்தந்த நாட்டு மக்களின் பாரம்பரிய முறையில் செய்கின்ற உணவுகளை பொறுத்து அதற்கான தனி உணவு பிரியர்கள் கூட்டம் எப்போதும் அவற்றை சுவைப்பதற்கு காத்துக்கிடக்கும்.

அந்த வகையில் இந்தியர்களின் தேசிய உணவு போன்று கருதப்படும் பிரியாணி தான் இந்த 2021 ஆம் ஆண்டில் பலர் விரும்பி ஆர்டர் செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்தந்த பகுதிகளில் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளை பற்றி டெலிவரி நிறுவனங்கள் தரவுகளை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் ஸ்விக்கி நிறுவனம் தற்போது இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு வகைகளை பற்றி புதிய ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 1 நிமிடத்துக்கு சுமார் 115 பிரியாணி வரை இந்தியர்கள் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். சராசரியாக 1 நொடிக்கு 2 பிரியாணி என்று இந்தியர்கள் ஆர்டர் செய்துள்ளனர். இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்மூலம் இந்தியர்களையும் பிரியாணியையும் பிரிக்கவே முடியாது என்கிற நிலை தான் உள்ளது. ஸ்விக்கி வெளியிட்ட இந்த ரிப்போர்ட்டில் சென்னை வாசிகள் அதிகப் படியாக சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர்.

ALSO READ |  6 மாசத்துல எப்படிம்மா குழந்தை.. மருமகளை விரட்டியடித்த மாமியார் - நீதிமன்றத்தில் வெளிவந்த மாப்பிள்ளையின் லீலை

மேலும் ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களிலும் அதிக அளவில் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். பெங்களூருவில் இந்த உணவு இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த தரவுகளின்படி வெஜிடேரியன் உணவுகளை விடவும் 4.3 மடங்கு அதிகமாக சிக்கன் பிரியாணியை இந்தியர்கள் ஆர்டர் செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் இந்த ரிப்போர்ட்டின் மூலம் இந்தியர்கள் பலர் பிரியாணி பிரியர்களாக உள்ளனர் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. மேலும் அதிக அளவில் ஆர்டர் செய்த ஸ்னாக்ஸ் வரிசையில் முதல் இடத்தை பிடித்திருப்பது சமோசா தான். நியூசிலாந்து நாட்டின் மக்கள் தொகையின் அளவிற்கு இந்த ஆண்டில் சமோசாவை இந்தியர்கள் ஆர்டர் செய்துள்ளனர். இதன் மூலம் நொறுக்கு தீனி பிரியவர்களுக்கு சமோசா தான் மிகவும் பிடித்தமான உணவு என்று தெரிய வந்துள்ளது.

ALSO READ |  பழங்குடியினரை மதமாற்ற முயற்சி செய்ததாக 4 மதபோதகர்கள் கைது

இதில் பாவ் பஜ்ஜி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இரவு 10 மணிக்கு மேல் சீஸ் கார்லிக் பிரட், பாப்கார்ன், மற்றும் பிரஞ்சு பிரைஸ் ஆகிய ஸ்னாக்ஸ் உணவுகளை அதிக பேர் ஆர்டர் செய்துள்ளனர். கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடிய உணவுகளில் எனோக்கி மஷ்ரூம் (Enoki Mushroom) என்கிற ரெசிபி தான் முதல் இடத்தில் உள்ளது.



அடுத்தாக கொழுக்கட்டையை தான் அதிக பேர் கூகுளில் தேடி உள்ளனர். இதற்கு அடுத்த வரிசையில் மேத்தி மட்டர் மலாய், பாலக், சிக்கன் சூப் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த வரிசையில் பலர் பிரியாணி அல்லது தோசையை எதிர் பார்த்திருப்பீர்கள். ஆனால் இவற்றை அதிக பேர் தேடவில்லை என்பது ஆச்சரியம் தான்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Biriyani, YearEnder 2021

அடுத்த செய்தி