கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி- ஒப்புதல் அளித்த மத்திய அரசு

கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி- ஒப்புதல் அளித்த மத்திய அரசு
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு 11,092 கோடி ரூபாய் வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸால் நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதற்கிடையில், கொரோனா பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் 11,092 கோடி ரூபாய் வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

முன்னதாக, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.


இதன்படி கொரோனா வைரஸை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒப்புதல் வழங்கினார். மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி மாநிலங்களின் பேரிடர் நிவாரண நிதியில் சேர்க்கப்பட உள்ளது.

இதன்மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். தனிமை முகாம்கள் அமைக்கப்படும். மருத்துவமனை, தனிமை முகாம்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர், உடைகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படும்.

Also see:
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading