• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கடும் தட்டுப்பாடு... துருக்கியிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு...!

கடும் தட்டுப்பாடு... துருக்கியிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு...!

  • News18
  • Last Updated :
  • Share this:
நாடு முழுவதும் நிலவிவரும் வெங்காயத் தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கையாக, துருக்கியிலிருந்து 11,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், கனமழை காரணமாக உற்பத்தி குறைந்ததால் நாடு முழுவதும் வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தட்டுப்பாட்டை போக்க தீவிர முயற்சியில் இறங்கிய மத்திய அரசு முதற்கட்டமாக எகிப்து நாட்டிலிருந்து 6090 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவுசெய்தது.

அவை டிசம்பர் மாதத்தின் 2-வது வாரத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, துருக்கி நாட்டிலிருந்தும் 11,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த வெங்காயம் டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியா வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் விலையும் பல மடங்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: