முகப்பு /செய்தி /இந்தியா / சிறுவனை கடத்தி ரூ.30 லட்சம் கேட்ட கும்பல்.. பலே திட்டம் தீட்டி 24 மணிநேரத்திற்குள் மீட்ட போலீஸ்

சிறுவனை கடத்தி ரூ.30 லட்சம் கேட்ட கும்பல்.. பலே திட்டம் தீட்டி 24 மணிநேரத்திற்குள் மீட்ட போலீஸ்

24 மணிநேரத்தில் மீட்கப்பட்ட சிறுவன்

24 மணிநேரத்தில் மீட்கப்பட்ட சிறுவன்

11 வயது சிறுவனை கடத்தி வைத்து அவரது பெற்றோரிடம் இருந்து ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கடத்தல் கும்பலை காவல்துறை துறை சாமர்த்தியமாக பிடித்து பாரட்டுக்களை பெற்று வருகிறது.

  • Last Updated :
  • Noida, India

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் அக்டோபர் 2ஆம் தேதி காலை 11 மணி அளவில் காணாமல் போயுள்ளார். சிறுவனை பெற்றோர் தேடிவந்த நிலையில், சிறிது நேரத்தில் சிறுவனை கடத்தி வைத்துள்ளதாக ஒரு மர்ம கும்பலிடம் இருந்து பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. சிறுவன் பத்திரமாக திரும்ப வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் பணம்  தர வேண்டும் என அந்த கும்பல் சிறுவனின் பெற்றோரை மிரட்டியுள்ளது.

பதறிப்போன பெற்றோர்  காவல்துறையிடம் தகவல் தந்துள்ளனர். காவல்துறை அவர்களை பிடிக்க திட்டம் தீட்டி அதை சிறுவனின் பெற்றோரிடமும் கூறி ஒத்துழைப்பை கேட்டுள்ளது. அதன்படி சிறுவனின் பெற்றோர் கடத்தல்காரர்களிடம் கேட்கும் பணத்தை தருவதாக நாடகமாடியுள்ளனர்.

அடுத்த நாள் காலை ஆறு மணி அளவில் ஒரு தனித்த இடத்திற்கு பெற்றோர் ரூ.30 லட்சம் பணத்துடன் வர வேண்டும் என கடத்தல்காரர்கள் கூறியுள்ளனர். அதன்படி, சிறுவனின் தந்தையும் பணத்துடன் காலை அந்த இடத்திற்கு ரூ.30 லட்சம் பணம் நிரப்பிய பையுடன் வந்துள்ளார்.அந்த பணத்தை அங்கேயே வைத்துவிட்டு செல்லுமாறு கடத்தல்காரர்கள் தந்தையிடம் கூறியுள்ளனர். அவரும் பணத்தை வைத்து நகர்ந்துவிட்டார். பின்னர் 11 வயது மகன் இருக்கும் இடத்தை தந்தையிடம் கூறிய கடத்தல்காரர்கள் அங்கு போய் மகனை அழைத்து செல்லாலம் என்றுள்ளனர்.

அந்த இடத்திற்கு சென்று தந்தையும் மகனை மீட்டுள்ளார். இந்த அனைத்து நகர்வுகளையும் காவல்துறை கூர்ந்து கண்காணித்துவந்த நிலையில், மகன் தந்தையுடன் இணைந்ததும் தனது அதிரடி நடவடிக்கையில் களமிறங்கியது. பணம் எடுத்து சென்ற கடத்தல் காரர்களின் வாகன எண்களை அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தெரிவித்து அலெர்ட் கொடுத்து.

மேலும், கடத்தல்காரர்களை துரத்திக் கொண்டு காவல்துறையும் பின்னே சென்றது. அதன்படி, லுக்சார் என்ற கிராமத்தில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரை காவல்துறை மடக்கியது.அத்துடன் பணப்பையுடன் சென்ற குற்றவாளி சிவம் என்பவரை சுஹாத்பூர் என்ற பகுதியில் மடக்கி பிடித்து பணத்தையும் மீட்டுள்ளது.

இதையும் படிங்க: 2025க்குள் 22 லட்சம் இந்திய ஐடி ஊழியர்கள் பணியைவிட்டு வெளியேற வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்த சேஸ்சிங்கில் சிவம் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், காவல்துறையும் பதில் தாக்குதல் நடத்தியது.இதில் சிவம் உடலில் இரு குண்டுகள் பாய்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்காவது நபரை காவல்துறை தேடி வருகிறது.

கடத்தப்பட்ட சிறுவனை பத்திரமாக பணத்துடன் 24 மணிநேரத்திற்குள் மீட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவந்து வருகிறது. மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்படைக்கு காவல் ஆணையர் ரூ.50,000 ஊக்கப் பரிசு அறிவித்துள்ளார்.

First published:

Tags: Crime News, Kidnap, Kidnapping Case, Police, Uttar pradesh