ஒரே நேரத்தில் 'வரதட்சணை வேண்டாம்' என்று உறுதிமொழி எடுத்த 11 மாற்றுத்திறனாளி ஜோடிகள்..

ஒரே நேரத்தில் 'வரதட்சணை வேண்டாம்' என்று உறுதிமொழி எடுத்த 11 மாற்றுத்திறனாளி ஜோடிகள்..

திருமணத்தின் போது 11 மாற்றுத்திறனாளி ஜோடிகள் வரதட்சணை வேண்டாம் என்ற உறுதிமொழி எடுத்துள்ளனர்.

திருமணத்தின் போது 11 மாற்றுத்திறனாளி ஜோடிகள் வரதட்சணை வேண்டாம் என்ற உறுதிமொழி எடுத்துள்ளனர்.

  • Share this:
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி, ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் நடந்த ஒரு திருமண விழாவில், பின்தங்கிய 11 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழாவை நாராயண் சேவா சன்ஸ்தான் என்ற அமைப்பு ஒருங்கிணைத்து நடத்தியுள்ளது. குறிப்பாக இந்த அமைப்பு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்த மக்களின் நல்வாழ்வுக்காக செயல்படுகிறது. 

மேலும் திருமணம் முடிந்த கையோடு 11 மாற்றுத்திறனாளி ஜோடிகளும், அமைப்பு ஊக்குவித்த பிரச்சாரத்தின் கீழ் சில உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர்.

அதன்படி "வரதட்சணை வேண்டாம்" என்று தம்பதிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் முகக்கவசங்களை அணிவோம் என்றும் மற்ற அனைத்து கொரோனா வழிகாட்டுதல்களையும் பின்பற்றவோம் என்றும் அவர்கள் சத்தியம் செய்து கொண்டனர். மேலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்கள் மக்களை வலியுறுத்தினர். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தம்பதிகளின் உறவினர்கள் மற்றும் என்எஸ்எஸ் உறுப்பினர்கள் மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், என்எஸ்எஸ் அமைப்பின் நன்கொடையாளர்கள் திருமணமான தம்பதிகளுக்கு வீட்டு உபகரணங்களை பரிசாக வழங்கியதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் பூஜா, கமலேஷ் ஜோடி பேசியதாவது, "இயலாமை என்பது ஒரு உடல் கோளாறு, இது ஒரு நோய் அல்ல" என்று விழாவில் கூறினர். கமலேஷ் தனது மூன்று வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் ஊன்றுகோல் உதவியுடன் நடக்க முடிந்தது. 

இருப்பினும், இது அவரது கனவுகளுக்கு ஒரு தடையாக செயல்படவில்லை. அவர் தனது படிப்பைத் தொடர்ந்தார் மற்றும் பஞ்சாயத்து உதவியாளராக ஒரு வேலையைப் பெற்றார். இது குறித்து பேசிய கமலேஷ், "நான் எப்போதுமே உணர்ச்சி ரீதியாக மிகவும் வலுவாக இருந்தேன். சவால்கள் என்னை பலப்படுத்தியுள்ளன. நான் ஒரு மளிகைக் கடையுடன் எனது சொந்தத் தொழிலைத் தொடங்கினேன். பின்னர், பஞ்சாயத்து உதவியாளராக ஒரு வேலையைப் பெற்றேன். தற்போது, இவ்வளவு ஆதரவாக இருக்கும் ஒரு வாழ்க்கைத் துணையை நான் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் "என்று பெருமிதத்தோடு கூறினார். 

அதேபோல, விபத்தில் தனது கால்களில் ஒன்றை இழந்து, விலையுயர்ந்த அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டி இருந்த பூஜா விழாவில் பேசியதாவது, "எனது வாழ்க்கை துணையான கமலேஷை சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் ஒரு விபத்தில் எனது காலை இழந்தேன். அறுவை சிகிச்சைக்கு நிறைய செலவு செய்ய வேண்டி இருந்த சமயத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் ஆதரவு தரும் வகையில் NSS உதவியுடன் இலவசமாக சிகிச்சை பெற்றேன். 

இந்த அறுவை சிகிச்சையின் காரணமாக இப்போது நான் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," கூறினார். இதையடுத்து திருமண விழாவில் பேசிய NSS தலைவர் பிரசாந்த் அகர்வால், எங்களின் "வரதட்சணை வேண்டாம்" என்ற பிரச்சாரம் 18 ஆண்டுகளாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு முக்கிய பிரச்சாரமாகும். நாங்கள் திருமணம் செய்து வைத்த 2098 தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் இன்று வரை நலமுடன் இருப்பதை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என தெரிவித்தார்.
Published by:Tamilmalar Natarajan
First published: