இமாச்சல பிரதேசத்தில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசத்தில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள குல்லு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி
  • News18
  • Last Updated: September 25, 2018, 8:35 AM IST
  • Share this:
இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்தனர். தொடர் மழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மொத்தமுள்ள 12 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. நீரில் வாகனங்கள் அடித்துச் செல்லப்படுகின்றன.

நிலச்சரிவு காரணமாக, பத்ரிநாத், கேதர்நாத், யமுனோத்ரி செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், யாத்திரை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து மணாலிக்கு சுற்றுலா சென்ற 70-க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். எனினும், அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல, குலு மாவட்டத்தில் வெள்ளத்தில் தவித்துவந்த 21 பேரை விமானப் படை குழுக்கள் மீட்டுள்ளன. ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அரசு நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. கனமழை காரணமாக, நேற்று ஒரே நாளில் வடமாநிலங்களில் 11 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் பள்ளிகள் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
First published: September 25, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading