பிரிட்டனிலிருந்து டெல்லி திரும்பிய 11 பேருக்குக் கொரோனா பாசிட்டிவ்; புதுவகை கொரோனாவா?- 50 பேர் தனிமை

பிரிட்டனிலிருந்து டெல்லி திரும்பிய 11 பேருக்குக் கொரோனா பாசிட்டிவ்; புதுவகை கொரோனாவா?- 50 பேர் தனிமை

பயணிகளுக்கு உதவும் பணியாளர்கள்.

பிரிட்டனிலிருந்து புதுடெல்லி வந்த 4 விமானங்களில் வந்திறங்கிய 11 பயணிகளுக்கு டெல்லி விமான நிலையப் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

  • Share this:
    பிரிட்டனிலிருந்து புதுடெல்லி வந்த 4 விமானங்களில் வந்திறங்கிய 11 பயணிகளுக்கு டெல்லி விமான நிலையப் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஜெனஸ்ட்ரிங் டயாக்னிஸ்டிக் செண்டரின் நிறுவனர் கௌரி அகர்வால் இதனை உறுதி செய்தார்.

    பிரிட்டனில் உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனா பரவி வருகிறது, இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முந்தைய கொரோனா வகை மாதிரியை விட இது 70% அதிகம் பரவக்கூடியது என்று கூறுகின்றனர், மத்திய அரசும் நேற்று இந்த புதுவகை கொரோனா பெரும்பரவல் வகையறாவைச் சேர்ந்தது என்று எச்சரித்துள்ளது.

    பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் 744 பேர் பலியானதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 69,051 ஆக அதிகரித்துள்ளது.

    பிரிட்டனிலிருந்து விமானத்தில் வருபவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்றால் அவர் அமர்ந்து வந்த விமான இருக்கை வரிசைக்கு முந்தைய 3 வரிசை மற்றும் பிந்தைய மூன்று வரிசை பயணிகளும் தனிமைப்படுத்தப்படுவது அவசியம் என்று மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கௌரி அகர்வால் கூறும்போது, “ஏற்கெனவே விலக்குகள் இருந்தாலும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. லண்டனிலிருந்து 950--க்கும் கூடுதலான பயணிகள் வந்துள்ளனர், அவர்களுக்கு டி3 முனையத்தில் உள்ள எங்கள் சோதனைச் சாலையில் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

    இந்த 11 பேரின் கொரோனா மாதிரிகளும் மேலும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அப்போதுதான் அதில் புதுவகை கொரோனா ஸ்ட்ரெய்ன் இருக்கிறதா என்பது கண்டறியப்பட முடியும் என்றார் அவர்.
    Published by:Muthukumar
    First published: