உ.பி.யில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது - 11 பேர் உயிரிழப்பு

உ.பி.யில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது -  11 பேர் உயிரிழப்பு
  • Share this:
உத்தரபிரதேசத்தின் மாவ் அருகே சிலிண்டர் வெடித்து இரண்டு மாடிக் கட்டடம் இடிந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

வாலீத்பூர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் காலையில் சிலிண்டர் வெடித்தது. அதனால் வீடு தீப்பற்றி எரிந்த நிலையில் அதில் சிக்கியவர்களை மீட்க அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் முயன்றனர். அப்போது இருமாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.

அதில் 24 பேர் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சிலர் காயமடைந்தனர்.


மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

 
First published: October 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading