குஜராத்தில் லாரிகள் மோதி விபத்து: 11 பேர் உயிரிழப்பு,17-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்..

குஜராத் மாநிலம் வதோதராவில் லாரிகள் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர், 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குஜராத்தில் லாரிகள் மோதி விபத்து: 11 பேர் உயிரிழப்பு,17-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்..
வதோதராவில் லாரிகள் மோதியதில் விபத்து (படம்: ANI)
  • Share this:
குஜராத் மாநிலம் வதோதரா அருகே 2 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 17-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வதோதரா அருகே வகோதியா கிராசிங் நெடுஞ்சாலையில் அதிகாலையில் இரண்டு லாரிகள் மோதிக்கொண்டன. விபத்தில் காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பவகத் என்ற இடத்தில் இருந்து சூரத்தை நோக்கி ஒரு குழுவினர் லாரியில் சென்றனர். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் விபத்து நேரிட்டது. சரியாக அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு எஸ்.எஸ்.ஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் விஜய் ரூபானி இரங்கல் தெரிவித்துள்ளார். சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்தனர். வதோதரா விபத்து கவலையளிப்பதாகவும் காயமடைந்தோர் கூடிய விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் கூறிய பிரதமர் மோடி, அரசு நிர்வாகம் எல்லா வகையான உதவிகளையும் வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
First published: November 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading