இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 இத்தாலியர்கள் டிஸ்சார்ஜ்!

37 பேர் வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு உடல்நலம் தேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 இத்தாலியர்கள் டிஸ்சார்ஜ்!
மாதிரிப்படம்
  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 11 இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் தற்போது குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இத்தாலியிலிருந்து வந்திருந்த 11 சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அவர்கள் அனைவரும் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

தற்போது தொடர் சிகிச்சையால் உடல் நலம் தேறிய இத்தாலியர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்திய அரசின் சார்பில் இவர்கள் அனைவரும் பாதுகாப்புக இத்தாலி தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


இதுவரையில் இந்தியாவில் மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று வந்த சுமார் 37 பேர் வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு உடல்நலம் தேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: தொடர்ந்து மூன்றாவது பேரிழப்பு... மத்திய அரசின் உதவி கோரும் கேரளா!
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்