மினி பேருந்து, லாரி மோதி கோர விபத்து: 11 பேர் உயிரிழப்பு

விபத்திற்கு முன்பாக எடுத்துக் கொண்ட செல்பி போட்டோ

இந்த விபத்தில் ஓட்டுநருடன் சேர்ந்து 11 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 • Share this:
  கர்நாடகாவில் தார்வாட் நகர் அருகே மினி பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், 10 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  தாவனகிரியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியே சுற்றுலா பயணிகள் சிலர் பேருந்தில் கோவா நோக்கி சென்று கொண்டிருந்தனர். இடிகட்டி எனும் பகுதியில் ஒற்றை வழி சாலையில் சென்ற பேருந்து, எதிபாராத விதமாக லாரியின் மீது மோதியது. இதில், பேருந்து தலைகீழாக கவிழ்ந்து முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஓட்டுநருடன் சேர்ந்து 11 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  விபத்து நடந்த போது


  பள்ளிப் பருவ பெண் தோழிகள் ஒன்றாக சுற்றுலா சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க...Celebrity Pongal | கணவர் மகனுடன் பொங்கல் கொண்டாடிய சவுந்தர்யா ரஜினிகந்த்...  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: