11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்கு: அதிர்ச்சி தகவல்

news18
Updated: February 13, 2018, 12:29 PM IST
11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்கு: அதிர்ச்சி தகவல்
மஹாராஷ்டிர மாநில முதல்வர் தேவந்திர பட்னாவிஸ்
news18
Updated: February 13, 2018, 12:29 PM IST
இந்தியாவில் 11 முதல்வர்கள் கிரிமினல் வழக்கைச் சந்தித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  மஹாராஷ்டிர மாநில முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் மீது மட்டும் 22 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்தம் அமைப்பும் (ஏடிஆர்) நேஷனல் எலெக்சன் வாட்ச் அமைப்பும் இணைந்து மாநில முதல்வர்களின் மீதுள்ள வழக்குகள் பற்றி ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. 

11 முதல்வர்கள் மீது எத்தனை கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பது குறித்து இந்த ஆய்வில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தேவந்திர பட்னாவிஸ் மீது 22 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் மூன்று வழக்குகள் மிகத் தீவிரமானவை.  பட்னாவிஸை தொடர்ந்து  கேரளா முதல்வர் பினராயி  விஜயன் மீது 11 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது 10 கிரிமினல் வழக்குகளும் ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் மீது 8 கிரிமினல் வழக்குகளும் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் மீது 4 கிரிமினல் வழக்குகளும் உள்ளன.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது 4 கிரிமினல் வழக்குகளும் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது 3 கிரிமினல் வழக்குகளும் உள்ளன.  பீகார் முதல்வர் மீது ஒரே ஒரு கிரிமினல் வழக்கு உள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீது தலா 2 வழக்குகள் உள்ளன.

 
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...