முகப்பு /செய்தி /இந்தியா / சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக மகாராஷ்டிராவில் 11 பேர் கைது!

சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக மகாராஷ்டிராவில் 11 பேர் கைது!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சமூக ஊடகங்களில் வரும் பல போலிச் செய்திகள் குடிமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா பரவல் தொடர்பாக பீதியை ஏற்படுத்தும் வகையில் போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக மகாராஷ்டிர சைபர் குற்றப்பிரிவு போலீசார் 11 பேரை கைது செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக மட்டும் 85 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த காவல்துறை, சமூக ஊடகங்களில் வரும் பல போலிச் செய்திகள் குடிமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்காக நாடு முழுக்க ஊரடங்கு அறிவித்த நாள் முதல் பதிவான முதல் தகவல் அறிக்கைகள் இவை என்று கூறியுள்ளது.

Also read: வதந்திகள் மூலம் ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவோரை தண்டிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் - உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

பேஸ்புக்-கிற்கு அடுத்தது அதிகம் தவறாக பிரயோகிக்கப்பட்டது வாட்ஸ்அப் என்று சைபர் குற்றப்பிரிவு போலிசார் தெரிவித்திருகின்றனர்.

மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக எண்ணிக்கையில் இந்த மாநிலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also see:

First published:

Tags: CoronaVirus, Fake News, Maharashtra