நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் 3.5 லட்சமாக இருந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா 3-வது அலை தீவிரமடைந்துள்ளது. அங்கு ஒரு நாள் கொரோனா பாதிப்பு தற்போது 40,000-க்கும் அதிகமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டாலும் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா 3-வது அலை பிப்ரவரி 3 வாரத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை தெரவித்துள்ளது. இதனால் 10-ம் பொதுத் தேர்வுகளை மார்ச் இறுதியில் நடத்த கல்வித்துறை திட்டமிட்டு அதற்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி கர்நாடக மாநிலத்தில் மார்ச் 28-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னடம், தமிழ் உள்ளிட்ட முதல் மொழி தேர்வு 28-ந் தேதி நடக்கிறது. 30-ந் தேதி 2-வது மொழி ஆங்கிலம், கன்னட தேர்வும், ஏப்ரல் 4-ந் தேதி கணிதம், 6-ந் தேதி சமூக அறிவியல், 8-ந் தேதி இந்தி உள்பட 3-வது மொழி, 11-ந் தேதி அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளன என்று பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.
Also Read : குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்... ஏன் தெரியுமா?
இதனிடையே தமிழத்தில் 10 ,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறப்பதற்கு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.