ஆந்திராவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வின்போது கேள்வித்தாள்கள் வெளியான விவகாரத்தில் ஆந்திர முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு கேள்வி தாள் முன்னதாகவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது ஆந்திராவில் இருந்து செயல்படும் பிரபல கல்வி குழுமம் ஆன நாராயணன் கல்வி குழுமத்திற்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
Also Read :
ஒரே நேரத்தில் 4 திருமணம் - மின்வெட்டால் மாறிப்போன ஜோடி... திருமண வீட்டில் பரபரப்பு...
மேலும் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களும் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இதுபற்றிய விசாரணை ஆந்திர சிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சுமார் 20 நாட்களாக தொடர் விசாரணை மேற்கொண்ட சிஐடி போலீசார் இன்று ஹைதராபாத்தில் உள்ள கே.பி.ஹெச் பகுதியில் உள்ள நாராயணா கல்வி குழும தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாராயணா வீட்டிற்கு சென்று அவரையும் அவருடைய மனைவியையும் விசாரணைக்கு ஆந்திரா அழைத்து வந்தனர்.
விஜயவாடாவில் 2 பேரிடமும் விசாரணை நடைபெறும் நிலையில் அவர்களில் நாராயணா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.