திருடப்பட்ட 10-ஆம் நூற்றாண்டு பழமைவாய்ந்த சிவன் சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது லண்டன்..

லண்டனுக்கு கடத்தப்பட்ட சிவன் சிலை

10-ஆம் நூற்றாண்டு பழமைவாய்ந்த சிவன் சிலையை இந்திய தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்கிறது லண்டன் அரசு.

  • Share this:
    1998-ஆம் ஆண்டு திருடப்பட்டு லண்டனுக்கு கடத்தப்பட்ட ராஜஸ்தான் கதேஷ்வரர் கோவிலின் 10-ஆம் நூற்றாண்டு பழமைவாய்ந்த சிவன் சிலையை இந்திய தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்கிறது லண்டன் அரசு.

    லண்டன் அரசுக்கும், அதிகாரிகளுக்கு ம் இந்த சிலை குறித்து 2003-ஆம் ஆண்டில் தெரிவிக்கப்பட்டு, அதை மீட்டெடுக்கும் முயற்சி இந்திய அரசால் வலியுறுத்தப்பட்டது. அந்த சிலையை வாங்கி தனது பொருளாக வைத்திருந்த தனி நபர் ஒருவர் 2005-ஆம் ஆண்டு, லண்டனில் இருக்கும் இந்திய தூதரக அமைப்பிடம் அதை மறுபடி ஒப்படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Gunavathy
    First published: