10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ல் வெளியாகிறது

மாணவர்கள் - மாதிப்படம்

10 மற்றும் 12ஆ ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 30 சதவீதம் வரை, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

 • Share this:
  10 மற்றும் 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

  அதன்படி, சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 4ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்த மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் தொடங்க இருக்கின்றது.

  கொரோனா காலத்தை கருத்தில்கொண்டு, 10 மற்றும் 12ஆ ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 30 சதவீதம் வரை, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒவ்வொரு வினாத்தாளிலும் 33 சதவீதம் உள் விருப்பமாக வினாக்கள் கேட்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கக்கூடிய வகையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  அதில், “சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த விரிவான அட்டவணை பிப்ரவரி 2ஆம் தேதி அறிவிக்கப்படும். கொரோனா தொற்றுநோய் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள் நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.

  மேலும் படிக்க... சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் மகன் ட்வீட்

  ஆனால் மாணவர்கள் தங்கள் படிப்பில் எந்த சிரமமும் இன்றி இருக்க ஆசிரியர்கள் உழைத்து வருகின்றனர்.” என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published: